உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா

ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா


படங்களில் பெரிதாக நடிக்காவிட்டாலும் பரபரப்பான நடிகை ஓவியா. கடந்த 2019ம் ஆண்டு 90எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய 4 படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பு இல்லை. 'பூமர் அங்கிள்' என்ற படத்தில் ஓவியாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட் விரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் 'சேவியர்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். 'அக்னி தேவி' மற்றும் 'ப்ரெண்ட்ஷிப்' ஆகிய படங்களை தயாரித்த ஷான்டோவா ஸ்டுடியோ தயாரித்துள்ளது. ஜான் பால்ராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹர்பஜன் சிங் 'டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா' என்ற கேரக்டரிலும் ஓவியா 'வர்ணா' என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர ஜிபி.முத்து, வி டி வி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.எம். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், மாணிக் இசை அமைக்கிறார். ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான சம்பவங்களை கொண்ட படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !