விஜய் 69வது படத்தின் தமிழக உரிமையை வாங்கும் லியோ தயாரிப்பாளர் லலித் குமார்
ADDED : 395 days ago
தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பே தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்த விஜய் 69வது படத்தின் வியாபாரம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.
அதாவது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை 78 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த வாரிசு படத்தின் தமிழக உரிமையையும் வாங்கி இருந்தார்.