மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
300 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
300 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
300 days ago
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியானது. ஒரே இரவில் யு டியுபில் தெலுங்கு டீசர் மட்டும் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நேற்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அது 32 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தெலுங்கு டீசர்களில் 'ராதே ஷ்யாம்' படத்தை அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதே சமயம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழி டீசர்களின் பார்வை கணக்குகளையும் சேர்த்தால் மொத்தமாக 70 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசராக பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' டீசர் 116 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.
300 days ago
300 days ago
300 days ago