உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி: மகள் வெளியிட்ட தகவல்

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி: மகள் வெளியிட்ட தகவல்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மனைவி மகேஸ்வரி. 66 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை கவனித்துக் கொள்வதற்கென்றே தனி பணியாளர்களை சத்யராஜ் நியமித்துள்ளார். இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியும். என்றாலும் இதனை சத்யராஜ் குடும்பம் வெளிப்படையாக அறிவிக்காததால் யாரும் இதுபற்றி வெளியில் பேசவில்லை.

இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இந்த தகவலை தற்போது பொது வெளியில் அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா (மகேஸ்வரி) கோமாவில் இருந்து வருகிறார். அவரை எங்கள் வீட்டில் வைத்து நன்கு கவனித்து வருகிறோம். அவருக்கான உணவை டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். எனினும் அதிக நம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும், மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமடைவார் என்று காத்திருக்கிறோம்.

என் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால், அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அதுபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய் (நாதாம்பாள்), அதாவது எனது பாட்டியும் தவறிவிட்டார். இதனால், நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும், அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக் கொள்கிறோம். என்று எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !