உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தவறை திருத்த படம் எடுத்த கே.பாலச்சந்தர்

பிளாஷ்பேக்: தவறை திருத்த படம் எடுத்த கே.பாலச்சந்தர்


கே.பாலச்சந்தர் இயக்கிய 'மரோ சரித்ரா' என்ற தெலுங்கு படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழகத்தில் தெலுங்கிலேயே 100 நாட்கள் ஓடியது. இந்த படத்தை 'ஏக் து ஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். கமல்ஹாசனுக்கு ஹிந்தியில் என்ட்ரி கொடுத்த படம் இது. ரதி ஹீரோயின். இந்த படமும் ஹிந்தி பேசும் 8 மாநிலங்களிலும் மகத்தான வெற்றி பெற்றது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். ஆனால் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பாலச்சந்தரை கடுமையாக விமர்சித்தார்கள். காரணம் படத்தின் கிளைமாக்சில் காதல் தோல்வியால் காதலர்கள் இருவரும் உயரமான மலைமீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வார்கள். 'காதலை ஜெயிக்க முடியாதவர்கள் காதலுக்காக உயிரையும் விடுவார்கள்' என்ற குரலோடு படம் முடியும்.

தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வல்ல. இந்த படம் தற்கொலையை தூண்டுகிறது என்கிற கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டது. இதனை கே.பாலச்சந்தரும் உணர்ந்தார். ஏக் துஜே கேலியேவின் கிளைமாக்சுக்கு வருந்தினார். தொடர்ந்து அவர் மனசாட்சி உறுத்த அதற்காகவே அவர் எடுத்த படம்தான் 'புன்னகை மன்னன்'. படத்தின் துவக்கமே மலை மீது இருந்து காதலன் (கமல்), காதலி (ரேகா) தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனால் இதில் காதலன் உயிர் பிழைத்து இன்னொரு கேரக்டர் மூலம் (ரேவதி) தற்கொலை தீர்வல்ல என்பதை உணர்வார். இப்படியாக தனது மனசாட்சிக்கு தானே சமாதானம் செய்து கொண்டர் கேபி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !