ஜோதிகாவை விட 3 மடங்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா
                                ADDED :  352 days ago     
                            
                             நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் இன்று நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது கங்குவா பட புரொமோசன் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டனர். 
அப்போது சூர்யா கூறுகையில், நான் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமானார். எனக்கு தமிழ் தெரியும் ஆனாலும், வசனங்களைக் பேச தடுமாறி கொண்டிருந்தேன். ஜோதிகா முதல் படத்திலேயே வசனங்களை தடுமாறாமல் பேசினார். குறிப்பாக காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கினார் என நினைவு கூர்ந்தார் சூர்யா.