மீண்டும் புதிய படம் இயக்கும் கே.எஸ்.அதியமான்
ADDED : 325 days ago
தமிழில் ‛சொர்ணமுகி, தூண்டில், பிரியசகி' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். இவர் ஹிந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் 2010ம் ஆண்டில் ஹிந்தியில் தும்சே மில்கர் என்ற படம் வெளியானது.
இதற்கிடையே உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி நடிக்க ‛ஏஞ்சல்' என்ற படத்தை இவர் இயக்கினார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் உதயநிதி அரசியலில் பயணிக்க தொடங்கியதால் படம் பாதியில் நின்று போனது. இதுதொடர்பாக உதயநிதி தங்களது படத்தில் நடித்து கொடுக்கவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அதியமான். இதில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விதார்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.