கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது!
ADDED : 388 days ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ள இந்த படம் ஒரு ஜாலியான காமெடி கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.