உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன்

அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் திரைக்கு வந்து ரூ.250 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வேடத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியின் பிறந்த நாளையொட்டி மேஜர் முகுந்த் வரதராஜனாக ராணுவ வீரராக தான் நடித்த அதே கெட்டப்பில் தனது வீட்டுக்கு சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கிச்சன் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது மனைவி ஆர்த்தி திடீரென்று சிவகார்த்திகேயனை ராணுவ உடையில் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆர்த்தி. லவ் யூ என்றும் பதிவிட்டுளளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !