துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர்
ADDED : 341 days ago
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்து நடித்து தெலுங்கில் வெளிவந்த படம் ' லக்கி பாஸ்கர்'. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியானது. வங்கி பண மோசடி தொடர்பான கதையில் வெளியானது. தீபாவளி வெளியீடாக வந்த இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இத்திரைப்படம் வெளிவந்த மூன்று வாரங்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த முதல் ரூ. 100 கோடி படமாக இப்படம் அமைந்துள்ளது.