குழந்தைகள் தினம் கொண்டாடிய மம்முட்டி
ADDED : 332 days ago
மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட மற்ற தினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குழந்தைகள் தினத்திற்கு பெரிதாக கொடுப்பதில்லை. இந்த நிலையில் நடிகர் மம்முட்டி மூன்று குழந்தைகளுடன் இன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுடன் அவர் செல்பி எடுக்க முயற்சிப்பது போலவும் அவர்கள் அதை ஆர்வமாக பார்ப்பது போலவும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.