புதுப்படத்தில் கமிட்டான ரோஷினி ஹரிப்பிரியன்!
ADDED : 329 days ago
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான ரோஷினி ஹரிப்பிரியன் தமிழில் பல ஹிட் திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டார். அதில் ஒன்று தான் ஜெய்பீம். இதனையடுத்து சீரியலை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையாள நடிகை ஷெல்லியுடன் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷெல்லியின் தோளில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ள ரோஷினி அந்த புகைப்படத்திற்கு அம்மா, மகள், தேநீர் என ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த திரைப்படமானது அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் டிராமாவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து ரோஷினியின் சினிமா கேரியர் சக்ஸஸ் ஆக ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.