திறமை உடன் அதிர்ஷ்டமும் வேண்டும் - பார்வதி நாயர்
ADDED : 385 days ago
தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான பார்வதி நாயர். சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்து வெளியான கோட் படத்தில் இவரும் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கான அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். மகிழ்ச்சியாக இருக்க ஸ்டாராக இருக்க வேண்டியதில்லை. நடிகர்களுக்கு எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்காது. என்ன தான் திறமையானவராக இருந்தாலும் அதில் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கும்'' என்றார்.