உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் - நயன்தாரா விவகாரம், எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் அசிங்கமான சண்டை

தனுஷ் - நயன்தாரா விவகாரம், எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் அசிங்கமான சண்டை


நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா இடையிலான மோதல் விவகாரம் நேற்று முதல் பரபரப்பாக உள்ளது. இது குறித்து யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. நயன்தாராவின் டாகுமென்டரியும் ஒரு வியாபாரம், தனுஷ் கேட்ட அல்லது கொடுக்க மறுத்த காரணமும் ஒரு வியாபாரம் என்பதுதான் அனைவரும் புரிந்து கொண்டது.

இருந்தாலும், நயன்தாராவின் அறிக்கை நேற்று வெளிவந்தது முதல் எக்ஸ் தளத்தில் கடுமையான, அசிங்கமான சண்டை அரங்கேறி நடந்து வருகிறது. நயன்தாராவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் களமாட ரசிகர்கள் மிகவும் குறைவு. அதே சமயம் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் களமாட, ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் மிக அதிகம்.

எக்ஸ் தளத்தில் நேற்று 'CharacterlessLadyNayanthara' என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்தனர். அதில் சில வரம்பு மீறி ஆபாசமான வார்த்தைகளுடன், அசிங்கமான கெட்ட வார்த்தைகளுடன் கூடிய சண்டையாகவும் இருந்தது.

இந்த விவகாரம் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதில் அறிக்கையும் வரவில்லை. அதே சமயம் தனுஷ் ரசிகர்களின் எதிர்ச் செயல் அவர்களாக செய்ததா அல்லது செய்யச் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !