கலகலப்பு- 3 அறிவிப்பை வெளியிட்ட குஷ்பூ!
ADDED : 332 days ago
ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு- 2 என்ற இரண்டு படங்களை இயக்கிய சுந்தர். சி அடுத்து அப்படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்கப் போகிறார். இது குறித்த ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமும் இந்த கலகலப்பு-3 படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகிறது. 2025ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த தொழிலதிபர் கண்ணன் ரவி ஏற்கனவே தமிழில் சாந்தனு நடித்த 'ராவணக் கோட்டம்' என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.