உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'காந்தாரா சாப்டர்-1': அடுத்த ஆண்டு அக்டோபர் 2ல் ரிலீஸ்!

'காந்தாரா சாப்டர்-1': அடுத்த ஆண்டு அக்டோபர் 2ல் ரிலீஸ்!


கடந்த 2022ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் 'காந்தாரா'. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வசூலித்தது. அதையடுத்து காந்தாரா படத்தின் முந்தைய கதையை 'காந்தாரா சாப்டர்-1' என்ற பெயரில் அவர் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த காந்தாரா சாப்டர்-1 படம் 2025ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஜிசு செங்குப்தா, ஜெயராம் உள்ளிட்ட பல நடித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !