திருச்செந்தூர் கோவிலில் கணவருடன் சூரியை சந்தித்த ரம்யா பாண்டியன்
ADDED : 330 days ago
ஜோக்கர், ஆண் தேவதை உட்பட சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தனக்கு யோகா கற்றுக் கொடுத்த மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்த ரம்யா பாண்டியன், பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 9ம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார் ரம்யா பாண்டியன். அப்போது நடிகர் சூரியும் அங்கு வந்திருக்கிறார். இதை யடுத்து அவரை தனது கணவருக்கு அறிமுகம் செய்து வைத்த ரம்யா பாண்டியன், சூரியிடத்தில் வாழ்த்தும் பெற்றார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியாகி உள்ளன.