கடப்பா தர்ஹா தரிசனம் ; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ராம்சரண்
ADDED : 321 days ago
ஆந்திராவில் உள்ள கடப்பா தர்ஹாவில் 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்வில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவர் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் அடுத்த வருடம் நிச்சயமாக நடிகர் ராம்சரண் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என உறுதி அளித்திருந்தார். ராம்சரணிடமும் இந்த கஜல் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
சமீப நாட்களாக அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் ராம்சரண் ஏ.ஆர் ரஹ்மானின் வேண்டுகோளை சிறிதும் தட்டாமல் கடப்பா தர்ஹாவுக்கு சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வழிபாட்டை செலுத்தினார். ராம்சரணின் இந்த வருகை அங்கே தர்காவில் கூடியிருந்தவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.