உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி : ஸ்ரேயா வெளியிட்ட தகவல்

7 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி : ஸ்ரேயா வெளியிட்ட தகவல்

தமிழில் எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன் என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. கடைசியாக 2017ம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு கன்னடம், ஹிந்தியில் நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 44-வது படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இது குறித்து ஸ்ரேயா அளித்த ஒரு பேட்டியில், தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் இதுவரை நான் நடித்திராத சூர்யாவுடன் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து, ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடி இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !