உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா?

கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா?

நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனர் ஆக நடிகர் கவினை வைத்து 'கிஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது. தற்போது இந்த படத்திற்கு அனிரூத் பாடல்கள் தருவதை இழுத்து அடித்ததால் இப்படத்திலிருந்து அனிரூத்தை விலகி இப்போது ஜென் மார்டினை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஏற்கனவே கவினின் டாடா, ப்ளடி பெக்கர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !