உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம்

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம்

வடக்குப்பட்டி ராமசாமி, இங்கு நான்தான் கிங்கு படங்களுக்கு பிறகு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பலரும் அவருக்கு வணக்கம் செலுத்த அதற்கு தானும் வணக்கம் செலுத்தியபடி கோவிலை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வீடியோவில் சந்தானத்தை காண்பிப்பதற்கு முன்பு ஒரு பெண் நடந்து வருவது போன்று காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்து நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில், இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பெண் நடந்து வருவதை பார்த்து சந்தானம்தான் பெண் கெட்டப்பில் வருகிறாரா என்று தான் குழம்பி போய் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !