திருமணத்திற்கு தயாராகும் தமன்னா
ADDED : 400 days ago
அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். மேலும் ஏற்கனவே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே தமன்னா, விஜய் வர்மா திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் தமன்னா குடும்பத்தார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக தற்போது கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராக போகிறாராம் தமன்னா.