2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்'
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளிக்கு வெளிவந்தபடம் 'அமரன்'. இப்படத்திற்கான வரவேற்பு முதல் காட்சியில் இருந்தே சிறப்பாக இருந்தது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரிய வெற்றியையும், லாபத்தையும் கொடுத்த படமாக அமைந்தது.
2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக தற்போது இந்தப் படம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம்தான் இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையும் 'அமரன்' முறியடித்துள்ளது.
அது மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதிகம் பேர் பார்த்த படமாக அமைந்து அங்கு 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலையும் படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வசூலைப் பொறுத்தவரையில் 'தி கோட்' படம் முன்னணியில் இருந்தாலும், தியேட்டர்களுக்கு வந்து பார்த்த பார்வையாளர்கள் விதத்தில் 'அமரன்' தான் இந்த ஆண்டின் நம்பர் 1 படமாக இருக்கிறது.