உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட்

அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 1100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதையடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் அட்லி. பீரியட் கதையில் உருவாகும் இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் உருவாகிறது. அந்த இரண்டு ஹீரோக்களில் ஒருவர் சல்மான்கான் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்ட அட்லி, அதையடுத்து இன்னொரு ஹீரோவாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார் அட்லி. அதோடு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கப்போகும் அந்த இன்னொரு ஹீரோ யார் என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !