நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
ADDED : 318 days ago
தனுஷ் இயக்குனராக ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதும் நிறைவு பெற்றதாக படக்குழு வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.