அக்ஷிதாவிற்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்
ADDED : 315 days ago
கன்னட நடிகையான அக்ஷிதா போபைய்யா தமிழில் 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தவிர கன்னடத்திலும் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ள இவர் இன்ஸ்டாகிராமில் மாடலிங்கில் கலக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவருக்கும் ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமண தினத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.