உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 24 மணி நேர சாதனையில் நம்பர் 1 இடத்தில் 'கிஸ்ஸிக்'

24 மணி நேர சாதனையில் நம்பர் 1 இடத்தில் 'கிஸ்ஸிக்'


சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படத்தின் 'கிஸ்ஸிக்' லிரிக் வீடியோ நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

ஸ்ரீ லீலா அப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் பாகத்தில் சமந்தா நடனமாடியதைப் போன்ற சிறப்புத் தோற்றப் பாடல் இது. இப்பாடலுக்கு ரசிகர்களிடம் உடனடியாக வரவேற்பு கிடைத்தது. ஒரே இரவில் 17 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் நேற்று மாலை 24 மணி நேர முடிவில் 27 மில்லியன் பார்வைகளைக் கடந்து தென்னிந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் யுவன் இசையில் வந்த 'தி கோட்' படப் பாடலான 'விசில் போடு' பாடல் 24 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சாதனையாக இருந்தது. 'கிஸ்ஸிக்' பாடல் மற்ற மொழிகளையும் சேர்த்து 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !