பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்
                                ADDED :  339 days ago     
                            
                             
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதன் பிறகு லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்தார். அதையடுத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல் ஐ கே', அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'டிராகன்' போன்ற படங்களில் நடித்து விடுகிறார். 
இந்த நிலையில் அடுத்தபடியாக கீர்த்தி ஈஸ்வரன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.