அமரன் படத்தின் வெற்றி விழா- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
                                ADDED :  338 days ago     
                            
                             
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரைக்கு வந்த படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்ற இந்த படம் திரைக்கு வந்து 25 நாட்களில் 315 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட ராஜ்கமல் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த படத்தைப் பார்த்துவிட்டு படம் சிறப்பாக இருப்பதாக முதல் விமர்சனத்தை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு கேடயம் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.