சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீ லீலா!
ADDED : 337 days ago
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருடன் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், விக்ராந்த், டான்சிங் ரோஸ், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடிக்கும் போதே சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்திலும் நடிக்கப் போகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். அவரை தொடர்ந்து ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.