தெலுங்கில் அறிமுகமாகும் விவேக் மற்றும் மெர்வின்!
ADDED : 319 days ago
தமிழில் ஒரசாத, காண்டு கண்ணம்மா உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களை இசையமைத்தவர்கள் விவேக், மெர்வின். தமிழில் 'வடகறி, குலேபகாவலி, பட்டாஸ், சுல்தான்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
தற்போது முதல் முறையாக விவேக், மெர்வின் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். அதன்படி, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ராம் பொத்தினேனியின் 22வது படத்திற்கு விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.