உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 47 வயதில் திருமணம் செய்து கொண்ட சுப்பராஜு

47 வயதில் திருமணம் செய்து கொண்ட சுப்பராஜு


தெலுங்குத் திரையுலகத்தில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் இருப்பவர் சுப்பராஜு. தமிழிலும், “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போக்கிரி, பாகுபலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ள சுப்பராஜு தனது 47வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்த பின் மனைவியுடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “கடைசியாக சிக்கிக் கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் அதிகமான விவாகரத்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் நடிகர் ஒருவர் 47 வயதில் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு ஆறுதலான ஒரு விஷயமாகத்தான் இருக்கும். திருமண பந்தத்தில் உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறைந்துவிடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !