வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன்
ADDED : 336 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் திரைக்கு வந்து 30 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை 325 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளிலும் இந்த அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளிநாடுகளில் 105 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்திருக்கிறது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படம் வெளிநாடுகளில் 101 கோடி ரூபாய் வசூலித்தது. அதைவிட நான்கு கோடி அதிகமாக மொத்தம் 105 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்திருக்கிறது அமரன் படம்.