விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ!
ADDED : 391 days ago
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். இதன் படப்பிடிப்பு மீதமிருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அஜர்பைஜான் அல்லது தாய்லாந்து நாட்டில் ஒரு வார படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளனர். இதனால் பொங்கல் ரிலீஸ் உறுதி, எந்தவொரு மாற்றமும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.