சூர்யா 45 படத்தில் இணைந்த நட்ராஜ்!
ADDED : 280 days ago
நடிகர் சூர்யா அடுத்து ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க லப்பர் பந்து சுவாசிகா இணைந்துள்ளார் என தெரிவித்ததை தொடர்ந்து மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நட்ராஜ் இணைந்துள்ளார் என்கிறார்கள். சமீபத்தில் இவர் மகாராஜா, கடைசி உலகப்போர், சொர்கவாசல் மற்றும் கங்குவா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.