உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னட நடிகை ஷோபிதா மரணம்

கன்னட நடிகை ஷோபிதா மரணம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் ஷோபிதா(வயது 30). இவர் கன்னட திரைஉலகில் அறிமுகமாகி ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜனப்பிரியா, பிரம்மகுண்டு சித்தப்பா, மங்களகௌரி, கோகிலே, பிரம்மகந்து, கிருஷ்ண ருக்மணி, மனேதேவா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் அவர் டி.வி.க்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.

கடந்த ஆண்டு சிவண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஷோபிதா தனது கணவர் சிவண்ணாவுடன் ஐதராபாத்தில் குடியேறினார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான் வசித்து வந்த ஐதராபாத் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !