உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புறநானூறு' பற்றி பரவும் வதந்தி?

'புறநானூறு' பற்றி பரவும் வதந்தி?


சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் 'புறநானூறு'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இதனிடையே, இப்படத்தின் அறிவிப்பு முன்னோட்டத்திற்கான படப்பிடிப்பு ஒன்று நடந்த போது சுதாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை நடந்து அதனால் படப்பிடிப்பு ரத்தானதாகவும் கடந்த இரண்டு நாட்களாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், 'பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ஒருவரை அடிக்கும் சிறு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அது 'புறநானூறு' பற்றிய வதந்திகளைப் பரப்பியவர்களுக்கான பதிலடி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !