நேத்ரன் குறித்து பாக்கியலெட்சுமி சதீஷ் உருக்கம்
ADDED : 301 days ago
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக நேற்று காலமானார். பல சின்னத்திரை நடிகர்களும் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், சதீஷும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 'அன்பு சகோதரன் நேத்ரன் ஆறு மாதமாக கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார். நேத்ரனை எனக்கு 22 வருடங்களாக தெரியும். இத்தனை வருடத்தில் நேத்ரன் ஒருமுறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை. மிகவும் மென்மையானவர். பக்குவமானவர். கனிவாக பேசக்கூடிய ஆத்மா. நல்லவர்களை ஆண்டவன் ஏன் இவ்வளவு சோதிக்கிறான்னு தெரியல. நேத்ரனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் வேண்டிக்குவோம்' என உருக்கமாக கூறியுள்ளார்.