ஹனிமூனுக்காக ஐஸ்லாந்த் நாட்டுக்கு செல்லும் நாகசைதன்யா- சோபிதா!
ADDED : 313 days ago
சமந்தாவுடனான திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்த நிலையில் அதையடுத்து இன்னொரு நடிகை சோபிதா உடன் காதல் ஏற்பட்டு அவரை கடந்த டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு நாகசைதன்யாவும், சமந்தாவும் திருமணம் செய்து கொண்ட பிறகு ஹனிமூனுக்காக அமெரிக்காவில் உள்ள நியூயாருக்கு சென்ற நிலையில், தற்போது நாக சைதன்யாவும், சோபிதாவும் ஐஸ்லாந்த் நாட்டுக்கு ஹனிமூனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.