சீனாவில் ரூ.56 கோடி வசூலைக் கடந்த மகாராஜா!
ADDED : 347 days ago
இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் திரைக்கு வந்த படம் 'மகாராஜா' . இந்தபடத்தின் வெற்றிக்குப் பிறகு சமீபத்தில் சீனாவில் 40,000க்கும் மேற்பட்ட திரைகளில் ஹிந்தி சப்டைட்டில் உடன் இப்படம் வெளியானது.
சீனாவில் மக்கள் தந்த வரவேற்பினால் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இப்படம் சீனாவில் 9 நாட்களில் ரூ.56.85 கோடி வசூலித்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது சீனா வசூலையும் சேர்த்து ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.