உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛ஒவ்வொரு மூச்சும் புதிய துவக்கம்'': ஓவியா

‛‛ஒவ்வொரு மூச்சும் புதிய துவக்கம்'': ஓவியா


படங்களில் பெரிதாக நடிக்காவிட்டாலும் பரபரப்பான நடிகை ஓவியா. கடந்த 2019ம் ஆண்டு 90எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய 4 படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பு இல்லை. 'பூமர் அங்கிள்' என்ற படத்தில் ஓவியாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது கிரிக்கெட் விரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் 'சேவியர்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் இவரது ஆபாச படம் என இணையத்தில் சிலரால் பகிரப்பட்டது. இதுதொடர்பாக ஓவியா தரப்பிலிருந்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், யோகா செய்வதுபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒவ்வொரு மூச்சும் ஒரு புதிய துவக்கம்” எனப் பதிவிட்டுள்ளார் ஓவியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !