உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட சுஜாதா

பிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட சுஜாதா


தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுஜாதா. ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. நேராக படப்பிடிப்புக்கு வருவார், யாருடனும் பேச மாட்டார். தனது கேரக்டரை உள்வாங்கி நடித்து விட்டு பிறகு தனிமையில் சென்று அமர்ந்து கொள்வார். பொது விழாக்களிலோ, அவர் படம் சம்பந்தப்பட்ட நிகழ்விலோ பங்கேற்க மாட்டார். அதற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது. சிவாஜி மறைந்தபோது அவரது இறுதி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுதான் பொது நிகழ்வு.

இலங்கையில் பிறந்த சுஜாதா வளர்ந்தது கேரளாவில். சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக 1971ம் ஆண்டு 'தபஷ்வினி' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சுஜாதாவை தமிழுக்கு அழைத்து வந்தார் கே.பாலச்சந்தர்.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்தியா முழுக்க வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. 1990ம் ஆண்டிற்குப் பிறகு திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். யார் யாருக்கெல்லாம் ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் 'வரலாறு'. தெலுங்கில் 'ஸ்ரீ ராமதாசு'. 2011ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

புரியாத புதிராகவே வாழ்ந்த சுஜாதாவுக்கு இன்று 72வது பிறந்த நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !