புதிய சீரியலில் கமிட்டான முத்தழகு ஷோபனா!
ADDED : 299 days ago
டிக்டாக் பிரபலமான ஷோபனாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முத்தழகு' தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் முத்தழகாகவே இடம்பிடித்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முத்தழகு சீரியல் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஷோபனாவை மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் விஜய் டிவியிலேயே ஷோபனா கம்பேக் கொடுத்துள்ளார். புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'பூங்காற்று திரும்புமா' என்கிற தொடரில் ஷோபனா ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மோதலும் காதலும் தொடரில் நடித்த சமீர் ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து ஷோபனாவின் ரசிகர்கள் அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.