வைரலாகும் நேத்ரனின் புகைப்படங்கள்! மகளின் எமோஷ்னல் பதிவு
ADDED : 307 days ago
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தார். அண்மையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறப்பு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேத்ரனுடன் நடித்த நண்பர்களும், சில நடிகர்களும் நேத்ரனின் நல்ல குணத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேத்ரனின் மகள் அபிநயா மிக சமீபத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். அவர் தற்போது தனது அப்பாவின் பழைய புகைப்படங்களை ஷேர் செய்து எமோஷ்னலான பதிவினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் நேத்ரனை ஹீரோவாக பார்க்க தவறவிட்டதை துர்பாக்கியம் என கூறி வருந்தி வருகின்றனர்.