உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்

காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்

ரிஷப் ஷெட்டி நடிப்பு, இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவின் கவனத்தை திருப்பிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 கோடியில் தயாராகி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இதனை தயாரித்தனர்.

ஏற்கனவே காந்தாரா 2ம் பாகம் 'காந்தாரா சாப்டர் 1' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக மலையாள நடிகரான ஜெயராம் தற்போது இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !