மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
292 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
292 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
292 days ago
கன்னட தயாரிப்பு நிறுவனமான 'சர்வதா சினி கராஜ்' மற்றும் மலையாள தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஷிமோகா கிரியேஷன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'சன்னிதானம் பி.ஓ'. (பி.ஓ என்றால் போஸ்ட் ஆபீஸ்). அமுதா சாரதியின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் யோகி பாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகிய மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, 'மூணாறு' ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகொடி, சாத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், 'கல்கி' ராஜா, விஷாலினி, தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் மது ராவ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அருண்ராஜ் இசை அமைக்கிறார், வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனர் அமுதா சாரதி கூறும்போது “சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இத்திரைப்படமாக உருவாகியுள்ளது. மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கதைக்கு முக்கியத்துவம் உள்ள விதத்தில் உருவாகியுள்ளது. தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக தயாராகி வருகிறது. 2025 கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
292 days ago
292 days ago
292 days ago