உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய விஜய்

கீர்த்தி சுரேஷ் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கோவாவில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்த தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாவை சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் கோவா சென்றுள்ளார்கள். குறிப்பாக, நடிகர் விஜய் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்யின் தீவிரமான ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !