உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபக் அப்படிப்பட்டவர் இல்லை - நக்ஷத்திரா சப்போர்ட்

தீபக் அப்படிப்பட்டவர் இல்லை - நக்ஷத்திரா சப்போர்ட்

பிக்பாஸ் சீசன் 8ல் சின்னத்திரை பிரபலமான தீபக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இவருடைய கேம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில சமயங்களில் விஜய் சேதுபதியிடமே துணிச்சலாக தனது கருத்தை சொல்லிவிடுகிறார். அதேசமயம் சிலர் தீபக் பாரபட்சமாக பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் அவருடன் இணைந்து நடித்த நக்ஷத்திரா தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'தீபக் உண்மையான ஜெண்டில் மேன். மனிதர்களை சமமாக பார்ப்பவர். எல்லோரையும் அவர் சமமாக தான் நடத்துவார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் சொல்லியது கிடையாது. ஆனால், தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் இப்போது இதை கூறுகிறேன்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !