'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' வசூலைக் கடந்த 'புஷ்பா 2'
ADDED : 352 days ago
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் முதலிடத்தில் 'டங்கல்' படமும், இரண்டாவது இடத்தில் 'பாகுபலி 2' படமும் உள்ளது. அடுத்து மூன்றாவது இடத்தை 'புஷ்பா 2' பிடித்துள்ளது. இப்படம் மூன்றாவது இடத்தில் வந்ததை அடுத்து 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
11 நாள் முடிவில் 'புஷ்பா 2' படம் 1409 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 'ஆர்ஆர்ஆர்' படம் 1350 கோடியுடன் நான்காவது இடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 1250 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் தற்போது உள்ளன.
'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூல் 1800 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக முடிவுக்கு வந்தது. அந்த வசூலை 'புஷ்பா 2' படம் முறியடிக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.