ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா
ADDED : 374 days ago
தமிழில் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமலுடன் தக்லைப் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கும் திரிஷா, அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45வது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யுடன் ஒரே விமானத்தில் சென்று வந்த திரிஷா, அங்கு தனக்கு வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவுகளை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு தற்போது ஐந்து நாட்களில் ஆறு விமானங்களில் தான் பயணம் செய்ததாக அது குறித்த விமான டிக்கெட்டுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதோடு விமானத்தில் தான் பயணித்தபோது, வானம் பூமி இரண்டையும் சேர்த்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார். இதில் உள்ளூர், வெளிநாடு பயணங்களும் அடக்கம்.